"
Trusted By8 Crore+ Players*

ரம்மி சொற்களஞ்சியம் ரம்மியில் பயன்படுத்தப்படும் சொற்களை கற்றுக்கொள்ளுங்கள்

Learn Rummy Terms - Rummy Glossary

ரம்மியில் பயன்படுத்தப்படும் சொற்களின் களஞ்சியம்

ரம்மியில் பயன்படுத்தப்படும் சொற்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறதா? கவலை வேண்டாம். JungleeRummy.com அனைத்து வகையான கேம்கள், கருத்துக்கள், விதிமுறைகள் மற்றும் கேம்பிளே போன்ற அனைத்திற்குமான ஒரு ஒட்டுமொத்த சொற்களஞ்சியத்தை உங்களுக்காக வழங்குகிறது! இந்தியன் ரம்மி கேம்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்கள் நீண்ட பட்டியலாக ஒன்று திரட்டப்பட்டுள்ளது.

101 பூல் ரம்மி: ரம்மியின் இந்த வகையில் ஒவ்வொரு டீலிலும் வெளியேற்றப்படும் அம்சம் இருக்கிறது. 101 பாயிண்ட்களை எட்டியதால் ஒருவரைத் தவிர அனைத்து பிளேயர்களும் வெளியேற்றப்படும் வரை விளையாட்டு பல டீல்களுக்கு தொடர்கிறது. தோல்வியுற்ற பிளேயர்கள் ஒவ்வொரு டீலின் முடிவிலும் அவர்களின் பொருந்தாத அல்லது ஒழுங்கமைக்கப்படாத கார்டுகளின் மொத்த மதிப்புக்கு சமமான பாயிண்ட்களைப் பெறுவார்கள். ஒரு பிளேயரின் ஸ்கோர் 101 பாயிண்ட்களை எட்டும்போது, அவர் கேமிலிருந்து வெளியேற்றப்படுவார் மற்றும் இறுதிவரை நிலைத்து இருக்கும் பிளேயர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

13-கார்டு ரம்மி: இந்த ரம்மி வேரியன்ட்டில், ஒரு பிளேயர் 13 கார்டுகளை சீக்வென்ஸ்களில் (குறைந்தது ஒரு ப்யூர் சீக்வென்ஸ் உட்பட) அல்லது சீக்வென்ஸ்கள் மற்றும் செட்களில் சேர்த்து அடிக்கி வைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கீழுள்ள பப்லுவை பார்க்கவும்.

201 பூல் ரம்மி: 201 பூல் ரம்மி கேமானது 101 பூல் ரம்மி கேமை ஒத்தது, இதில் உள்ள மாறுபாடு என்பது பிளேயர்கள் 201 பாயிண்ட்களை எட்டும்போது வெளியேற்றப்படுவார்கள். 201 பாயிண்ட்களை எடுக்காமல் இறுதி வரை தாக்குப்பிடிக்கும் பிளேயர் வெற்றி பெறுகிறார்.

ஏசெஸ்: ரம்மியில் பயன்படுத்தப்படும் 52 கார்டுகளைக் கொண்ட ஸ்டாண்டர்டு டெக்கில் 4 ஏசெஸ் இருக்கும். அவை கிளப்ஸ், டயமண்ட்ஸ், ஹார்ட்ஸ் மற்றும் ஸ்பேட்ஸ் போன்ற பல்வேறு சூட்களில் வருகின்றன. ஏசெஸ், ஏஸ் 2, 3 போன்ற குறைந்த-மதிப்பு சீக்வென்ஸை உருவாக்க பயன்படுத்தப்படலாம் அல்லது உயர் கார்டுகளுடனான ஒரு சீக்வென்ஸை உருவாக்கவும் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக ஏஸ், கிங் மற்றும் குயின். ஒவ்வொரு ஏஸ்களின் மதிப்பு 10 பாயிண்ட்கள் ஆகும். அச்சிடப்பட்ட ஜோக்கர் வைல்டு ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அச்சிடப்பட்ட ஜோக்கருடன் ஏசெஸ் வைல்டு ஜோக்கர்களாகவும் செயல்படும்.

பெஸ்ட் ஆப் த்ரீ: இது டீல்ஸ் ரம்மியின் ஒரு வடிவமாகும், இதில் பிளேயர்கள் மூன்று சுற்றுகளுக்கு விளையாடுவார்கள். மூன்று ஒப்பந்தங்களின் முடிவில், எதிராளிகளிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான சிப்களை வென்ற பிளேயர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

பை-இன்: இது கேஷ் ரம்மி டோர்னமெண்ட்டில் நுழைவதற்கு ஒருவர் செலுத்தும் பணத் தொகையை குறிக்கிறது. இது மிகவும் பொதுவாக, 'நுழைவு கட்டணம்' என்றும் குறிப்பிடப்படுகிறது, இதைத்தான் பிளேயர் பந்தயமாக வைத்து விளையாடுகிறார்கள். குவிந்த பை-இன்கள் பிரைஸ்பூலாக உருவாகிறது, இது டோர்னமெண்ட்டின் சிறந்த செயல்திறன் கொண்ட பிளேயர்களால் வெல்லப்படுகிறது.

கேஷ் கேம்கள்: கேஷ் கேம்கள் ரியல் மணி கொண்டு விளையாடப்படுகிறது மற்றும் இதில் வெல்பவர் ரியல் கேஷ் வெல்வார்.

சிப்கள்: சிப்கள் என்பது ரம்மி விளையாட பயன்படுத்தப்படும் மெய்நிகர் பணம் ஆகும். ஜங்லீ ரம்மியில், ஒவ்வொரு பிளேயரும் பிராக்டிஸ் கேம்களை விளையாடி தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள 10,000 பிராக்டிஸ் சிப்கள் இலவசமாக பெறுவார்கள்.

க்ளோஸ்டு டெக்: ஒவ்வொரு பிளேயருக்கும் ஒரு முழுமையான ஹேண்டை உருவாக்கும் கார்டுகள் கொடுக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் ஃபேஸ் டவுன் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் டெக்கை இது குறிக்கிறது. பிளேயர்கள் தங்கள் டர்ன்களின் போது க்ளோஸ்டு டெக்கிலிருந்து கார்டுகளை (ஒவ்வொரு டர்னிலும் ஒன்று) எடுக்கலாம். அனைத்து கார்டுகளும் பிளேயர்களால் எடுக்கப்பட்டவுடன் க்ளோஸ்டு டெக் மீண்டும் ஷஃப்பல் செய்து வைக்கப்படுகிறது.

டெட்வுட்: டெட்வுட் என்பது பொருந்தாத கார்டுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். எளிமையான வார்த்தைகளில் சொன்னால், எந்தவொரு அடுக்கு வரிசையின் ஒரு பகுதியாக இல்லாத கார்டுகள் டெட்வுட் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, ஒரு தோல்வியுற்ற பிளேயரிடம் சில டெட்வுட் இருக்கும்.

டீல்ஸ் ரம்மி: இந்த ரம்மி வேரியன்ட்டில், முன்பே தீர்மானிக்கப்பட்ட டீல்களுக்கு (பொதுவாக 2, 3 அல்லது 6) குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிப்கள் பிளேயர்களுக்கு ஒதுக்கப்படும். நுழைவு கட்டணத்தைச் செலுத்திய பிறகு, ஒவ்வொரு பிளேயரும் கேமின் தொடக்கத்தில் சிப்களைப் பெறுவார்கள். ஒவ்வொரு டீலின் வெற்றியாளரும் தோல்வியுற்ற பிளேயரிடமிருந்து அனைத்து சிப்களையும் பெறுவார்கள். இறுதி டீலின் முடிவில் அதிக எண்ணிக்கையிலான சிப்களைக் கொண்ட பிளேயர் இறுதியில் சாம்பியனாவார்.

டீலிங்: இது ஒவ்வொரு ஹேண்டிற்கும் (விளையாட்டின் ஒரு சுற்றில் இருப்பவர்கள்) கேமின் தொடக்கத்தில் டீலரால் விநியோகிக்கப்படும் கார்டுகளை குறிக்கிறது. டீலரை தேர்வு செய்ய டாஸ் போடப்பட்ட பிறகு டீலிங் நடைபெறும்.

டீலர்: ஒரு ஹேண்டின் தொடக்கத்தில் கார்டுகளை கையாளும் பிளேயர் டீலர் என்று அழைக்கப்படுகிறார். ஆஃப்லைன் கேம்களில், கேமின் டீலராக யார் இருக்க வேண்டும் என்பதை பிளேயர்கள் தாங்களாகவே முடிவு செய்வார்கள் அல்லது அதைத் தீர்மானிக்க டாஸ் போடுவார்கள்.

டெக்: இது கார்டுகளின் தொகுப்பை குறிக்கிறது. வழக்கமான ரம்மி டெக்கில் 52 கார்டுகள் இருக்கும். 13-கார்டு ரம்மியில், இரண்டு அச்சிடப்பட்ட ஜோக்கர்கள் உட்பட இரண்டு வழக்கமான கார்டு டெக்குகள் இருக்கும்.

டிக்ளேர்: ஒரு பிளேயர் 13-கார்டுகள் கொண்ட ரம்மி விளையாட்டின் குறிக்கோளை நிறைவு செய்யும் போது, அவர் ஒரு கார்டை ஃபினிஷ் ஸ்லாட்டில் டிஸ்கார்டு செய்து, தன் ஹேண்டில் உள்ள கார்டுகளை எதிராளிகளுக்கு டிக்ளேர் செய்து கேமை நிறைவு செய்கிறார்.

டிஸ்கார்டு: ஒரு பிளேயரின் டர்னில், அவர் க்ளோஸ்டு அல்லது ஒப்பன் டெக்கிலிருந்து ஒரு கார்டை எடுத்து, பின்னர் ஒப்பன் டெக்கில் ஒரு கார்டை ஃபேஸ் அப் நிலையில் போட வேண்டும். ஒரு கார்டை ஒப்பன் டெக்கில் வைக்கும் செயலே கார்டை டிஸ்கார்டு செய்வதாக குறிப்பிடப்படப்படுகிறது.

டிஸ்கார்டு பைல் / ஓப்பன் டெக்: டிஸ்கார்ட் பைல் / ஓப்பன் டெக் என்பது முதல் கார்டை தவிர, பிளேயர்களால் டிஸ்கார்டு செய்யப்பட்ட கார்டுகளைக் கொண்டுள்ளது. இது க்ளோஸ்டு டெக்கிற்கு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றும் அதில் ஒரு கார்டு ஃபேஸிங் அப்பாக வைக்கப்படும். ஒரு கேமின் தொடக்கத்தில் கார்டுகள் டீல் செய்யப்பட்ட பிறகு, மீதமுள்ள கார்டுகளில் இருந்து ஒரு கார்டு டேபிளில் ஒப்பன் டெக்கை அமைக்க ஃபேஸ் அப் நிலையில் வைக்கப்படும். பிளேயர்கள் டிஸ்கார்ட் பைலில் மேல் இருக்கும் கார்டை எடுக்கலாம் அல்லது க்ளோஸ்டு டெக்கிலிருந்து கார்டுகளை எடுக்கலாம்.

டிரா: ஒரு பிளேயரின் டர்னில், அவர் க்ளோஸ்டு அல்லது ஒப்பன் டெக்கிலிருந்து ஒரு கார்டை எடுக்க வேண்டும். இந்த செயல்முறை ஒரு கார்டை டிரா செய்யும் செயல் என்று அழைக்கப்படுகிறது.

டிராப்: கேம் முடிவடைவதற்கு முன்பு கேமை விட்டு வெளியேறும் விருப்பத்தேர்வு ஒரு பிளேயருக்கு உள்ளது, இது டிராப்பிங் என்று அழைக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மியில், "டிராப்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் பிளேயர்கள் தங்கள் டர்னில் கேமை டிராப் செய்யலாம்.

ஃபேஸ் கார்டு: அனைத்து சூட்களின் கிங்ஸ், குயின்ஸ், ஏசஸ் மற்றும் ஜாக்குகள் அனைத்தும் ஃபேஸ் கார்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஃபுல் கவுண்ட்: ஃபுல் கவுண்ட் என்பது ஒரு சுற்று / டீல் / கேமில் தனது கையில் உள்ள கார்டுகளின் மொத்த மதிப்பைப் பொருட்படுத்தாமல் ஸ்கோர் செய்யக்கூடிய அதிகபட்ச சாத்தியமான பாயிண்ட்கள் ஆகும்.

ஹேண்டு: கேமின் தொடக்கத்தில் ஒரு பிளேயருக்கு டீல் செய்யப்படும் கார்டுகள் ஹேண்டு என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிளேயரும் தனது ஹேண்டில் உள்ள கார்டுகளை சீக்வென்ஸ்கள் மற்றும் / அல்லது செட்களில் ஒழுங்கமைக்க வேண்டும்.

இம்ப்யூர் சீக்வென்ஸ்: ஜோக்கருடன் உருவாக்கப்பட்ட ஒரே சூட்டின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுகளின் தொகுப்பு இம்ப்யூர் சீக்வென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஜோக்கர்: ஜோக்கர் என்பது ரம்மி கேம்களில் நம்மிடம் இல்லாத கார்டுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய கார்டு ஆகும். இம்ப்யூர் சீக்வென்ஸ் அல்லது செட்டை உருவாக்க நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் ஹேண்டில் 5, 7 மற்றும் 8 இருந்தால், ஒரு சீக்வென்ஸை உருவாக்க உங்களுக்கு 6 தேவை. இது போன்ற சீக்வென்ஸை முடிக்க ஜோக்கரையும் பயன்படுத்தலாம்.

மெல்டிங்: மெல்டிங் என்பது கார்டுகளை சரியான சீக்வென்ஸ்கள் மற்றும் செட்களாக ஒழுங்கமைக்கும் செயல்முறையாகும்.

பப்லு: இந்தியன் ரம்மி என்பது இந்தியாவின் சில பகுதிகளில் பப்லு என்று அழைக்கப்படுகிறது. இந்தியன் ரம்மி / பப்லு என்பது கேமின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பதிப்புகளிலிருந்து சற்று வித்தியாசமானது.

பாயிண்ட்ஸ்: ஒரு டெக் என்பது 52 கார்டுகளைக் கொண்டிருக்கும் மற்றும் ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு உள்ளது. நம்பர் இடப்பட்ட கார்டுகள் அவற்றின் எண்களின் அதே மதிப்புகளைக் கொண்டிருக்கும் ஆனால் ஃபேஸ் கார்டுகள் அதாவது ஜோக்கர், குயின், கிங் மற்றும் ஏஸ் ஆகியவை ஒவ்வொன்றும் 10 பாயிண்ட்களைக் கொண்டிருக்கும். மேலும், ரம்மி விளையாட்டில் உள்ள பாயிண்ட்கள் எதிர்மறையானவை. தனது அனைத்து கார்டுகளையும் வெற்றிகரமாக ஒழுங்கமைக்கும் ஒரு பிளேயர் ஜீரோ பாயிண்ட்களைப் பெறுவார் மற்றும் கேமில் வெற்றிபெற்றவராவார்.

பாயிண்ட்ஸ் வேல்யூ: பாயிண்ட்ஸ் வேல்யூ என்பது ரம்மி கேமில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மதிப்பாகும், இது ஒரு பிளேயரின் இறுதி வெற்றிகளைத் தீர்மானிக்க உதவுகிறது. வெற்றிகளைக் கணக்கிட நாங்கள் பின்வரும் ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறோம்:

வெற்றிகள் = அனைத்து எதிராளிகளுடைய பாயிண்ட்களின் கூட்டுத்தொகை X ஒவ்வொரு பாயிண்ட்டின் மதிப்பு ரூபாயில் - ஜங்லீ ரம்மி கட்டணம்

பாயிண்ட்ஸ் ரம்மி: பாயிண்ட்ஸ் ரம்மி என்பது ஸ்ட்ரைக்ஸ் ரம்மி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சில நிமிடங்கள் மட்டுமே கேம் நீடிக்கும் என்பதால் இது மிக வேகமான ரம்மி வகையாகும். ஒரு டேபிளிற்கு 6 பிளேயர்கள் வரை விளையாடலாம். கேமில் வெற்றிபெற அவர்கள் தங்கள் கார்டுகளை விரைவாக இணைக்க வேண்டும். இந்த கேமானது பாயிண்ட்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஒவ்வொரு பாயிண்ட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட ரூபாய் மதிப்பு உள்ளது. தோல்வியுற்ற பிளேயர்களுக்கு, அவர்களின் பொருந்தாத கார்டுகளின் அடிப்படையில் பாயிண்ட்கள் கணக்கிடப்படுகின்றன.

பூல் ரம்மி: பூல் ரம்மியில் உள்ள பிரைஸ் பூல் பாயிண்ட்ஸ் ரம்மியில் இருப்பதைவிட பெரியதாகும். இது நிலையான எண்ணிக்கை கொண்ட டீல்கள் இல்லாத முழுமையான கேம் ஆகும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாயிண்ட்களை அடைந்தவுடன் பிளேயர்கள் வெளியேற்றப்படுவார்கள். உதாரணமாக, 101 மற்றும் 202 பாயிண்ட்ஸ் ரம்மியில், ஒரு பிளேயர் முறையே 101 பாயிண்ட்கள் மற்றும் 202 பாயிண்ட்களை எட்டினால் வெளியேற்றப்படுவார். ப்யூர் சீக்வென்ஸ்: ஜோக்கர் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரே சூட்டின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கார்டுகளின் குழு ப்யூர் சீக்வென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

ரம்மி டோர்னமெண்ட்கள்: ரம்மி டோர்னமெண்ட்கள் அதிக போட்டித்தன்மை கொண்டவை மற்றும் 5 சுற்றுகள் வரை நீடிக்கக்கூடியவை. டோர்னமெண்ட்கள் என்பதில் ஃப்ரீரோல்ஸ் / இலவச நுழைவு டோர்னமெண்ட்கள் மற்றும் கேஷ் டோர்னமெண்ட்கள் ஆகியவை அடங்கும். பிரைஸாக ரியல் மணியை வெல்ல பிளேயர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். ஒவ்வொரு டோர்னமெண்ட்டும் ஒரு நிலையான செயல்முறையைப் பின்பற்றுகிறது -- அதிக எண்ணிக்கையிலான சிப்களைக் கொண்ட பிளேயர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்கிறார்கள்.

செட்: வெவ்வேறு சூட்டில் ஆனால் ஒரே மதிப்பில் உள்ள மூன்று அல்லது நான்கு கார்டுகள் ஒரு செட் என்று அழைக்கப்படுகிறது.

சீக்வென்ஸ்: ஒரு சீக்வென்ஸ் என்பது ஒரே சூட்டின் தொடர்ச்சியான கார்டுகளின் குரூப் ஆகும். அது ப்யூர் அல்லது இம்ப்யூராகவும் இருக்கலாம்.

ஷஃப்லிங்: இது கார்டுகளின் சீரற்ற தன்மையை பராமரிக்க செய்யப்படும் செயல்முறை ஆகும். இது ஆன்லைனிலும் நேரில் விளையாடும் போதும் செய்யப்படுகிறது. நீங்கள் நேரில் விளையாடும் போது கார்டுகளை அதன் ஃபேஸ் டௌனில் வைத்து ஒன்றன் மீது ஒன்றாக தொடர்ந்து மாற்றி வைப்பதன் மூலம் ஷஃப்பல் செய்வீர்கள்.

சூட்: ஒரு சூட் என்பது ஒரே நிறம் மற்றும் சின்னம் கொண்ட 13 கார்டுகளின் செட்டாகும். நான்கு சூட்கள் உள்ளன: ஹார்ட்ஸ் (?), டைமண்ட்ஸ் (?), ஸ்பேட்ஸ் (?), மற்றும் கிளப்ஸ் (?).

அன்மேட்ச்டு கார்டுகள்: கேமின் முடிவில் தோல்வியுற்ற பிளேயர் செட் அல்லது சீக்வென்ஸில் அமைக்கத் தவறிய கார்டுகள் அன்மேட்ச்டு கார்டுகள் எனப்படும்.

வைல்டு ஜோக்கர்: டீலர் கார்டுகளை டீல் செய்த பிறகு ஜோக்கராக தேர்ந்தெடுக்கப்படும் கார்டு வைல்டு ஜோக்கர் என்று அழைக்கப்படுகிறது. இதனை ஒரு சீக்வென்ஸ் அல்லது செட்டை உருவாக்க எந்த கார்டுக்குமான மாற்றாக அமைக்கலாம்.

ரம்மியில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்ப சொற்களையும் புரிந்துகொள்ள எங்கள் ரம்மி விக்கி உதவும் என்று நம்புகிறோம். இப்போது கேமை விளையாட நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் ரம்மி விளையாட விரும்பினால், கண்டிப்பாக ஜங்லீ ரம்மியை முயற்சிக்க வேண்டும். உங்கள் விரல் நுனியில் பலவிதமான ரம்மி கேம்களை நாங்கள் வழங்குகிறோம். மேலும், எங்கள் பயனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான கேமிங் சூழலை வழங்குகிறோம். உங்கள் விருப்பமான சாதனத்தில் ரம்மி ஆப்பைப் பதிவிறக்கவும் மற்றும் வரம்பற்ற கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு உலகில் நீங்கள் நுழையலாம்.

கனெக்ட் வித் அஸ்

ரம்மியில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்ப சொற்களையும் புரிந்துகொள்ள எங்கள் ரம்மி விக்கி உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். ரம்மி விக்கியில் பயன்படுத்தப்படும் ஏதேனும் சொற்கள் குறித்து உங்களுக்கு கேள்விகள் இருந்தால், "ஹெல்ப்" பிரிவில் உள்ள "காண்டாக்ட் அஸ்” அம்சத்தைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம், உங்களுக்கு உதவுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

Win cash worth 11,350* as Welcome Bonus

Scroll to top